Saturday, December 22, 2007

'தங்க'மணி..?

ஞாயிற்றுக்கிழமை என்பதால் எட்டரை மணியாகியும் படுக்கையிலிருந்து எழாமல்புரண்டு கொண்டிருந்தான் ரங்கமணி.

தங்கமணி இரண்டு மூன்று முறை எழுப்பிப் பார்த்துவிட்டு சமையல் வேலையில்மூழ்கிப்போனாள்.

செல்போன் சிணுங்கியது. "சே.... ஞாயித்துக்கிழமை கூட தூங்க விடமாட்டானுக" முனகியவாறுசெல்லை எடுத்தான். மறு முனையில் மாதவன். ரங்கமணி உற்சாகமானான்.

"சொல்லு மாதவா"

"டேய் மேட்டர் ரெடி. எங்க? எப்போ? வச்சுக்கலாம்?"

"அப்படியா? நான் உன்னைத் திரும்ப கூப்பிடறேன்."

பெட்சீட் உதறி எழுந்தான்.

"தங்கமணி என்ன பண்றே?" கேட்டவாறே சமையலறைக்கு வந்தான்.

"ஹீக்கும்...... உங்களுக்கென்ன? ஞாயிற்றுக்கிழமையானா லீவு. பத்து மணிவரைக்கும்பெட்ல உருள்றீங்க. பொம்பளை ஜென்மத்துக்கு ஞாயிறு, பொங்கல், தீபாவளினு என்னைக்காவது லீவு உண்டா?. சாகற வரைக்கும் லீவே கிடையாது."

"தங்கமணி ஏன் காலைலயே சிடுசிடுங்கற. உன் தம்பிய பார்க்கனும்னா போய்ப் பார்த்துட்டு வா"

"நான் எதுக்குப் போறேன். எனக்கு என்ன சூடு சொரணை இல்லியா என்ன? ஃபாரின்ல இருந்து வந்தா அவன் என்ன பெரிய இவனா? அவன் கொண்டுவர்ர 50 ரூபா சாக்லெட்டும் 100 ரூபா பாடிஸ்பிரேயும் இங்க கிடைக்காதா? வேணும்னா அவன் வந்து என்னைப் பார்க்கட்டும்."

தான் பேசியது தனக்கே பூமராங்காக திரும்பி வருமென்று ரங்கமணி எதிர்பார்க்க வில்லை.

'நாம ஒரு ரூட் போட்டா இவ வேற ரூட் போடறாளே. மாதவன் வேற மேட்டரைரெடி பண்ணிட்டான். இதுவே ரொம்ப நாளா அவனை கெஞ்சி இன்னைக்குத்தான் ஓகே பண்ணியிருக்கான். இன்னைக்கு இவளை எப்படியாவது அவ தம்பி வீட்டுக்கு பேக்கப் பண்ணணுமே'

"என்ன அங்க இருந்து சத்தத்தையே காணோம்?"

"ஏன் தங்கமணி இப்படி கோவிச்சுக்கற? அன்னைக்கு ஏதோ கோபத்துல சொன்னேன்அதையே புடிச்சுக்கிட்டு நிக்கறயே?"

டிவியில் போகோ பார்த்துக்கொண்டிருந்த ஜீனியர் ரங்கமணி அங்கிருந்தே கத்தினான்."அம்மா மாமாவீட்டுக்குப் போலாம்மா. மாமா எனக்கு நெறைய சக்லெட்லாம் வாங்கிட்டு வந்திருப்பாங்கம்மா"

"சாக்லேட்....சாக்லேட்னு ஏண்டா அலையறே எல்லாம் உங்கப்பா வாங்கி தருவார்"தங்கமணி பதிலுக்கு கத்தினாள்.
"என்மேல இருக்க கோபத்தை ஏன் அவன் கிட்ட காட்ற. நான்தான் போய்ட்டு வான்னு சொல்றனே?"

"வேண்டாம் சாமி. நீங்க இன்னைக்கு ஒன்னு பேசுவீங்க நாளைக்கு ஒன்னு பேசுவீங்க.நான் எங்கயும் போகல. உங்களுக்கே ஊழியம் பார்க்கறேன். ஆளைவிடுங்க."

'ஆஹா.. இவ நம்ம ப்ளான்ல மண்ணைப்போட்ருவா போலிருக்கே. ம்ஹீம்... இது சரியாவராது. வேற ரூட்ல போய்த்தான் சரி பண்ணணும்'.

"ஏன் சும்மா கண்ணை கசக்கற. சரி ஒரு வாரமா கேட்டுட்டிருக்கியேனு இன்னைக்கு போகச்சொன்னேன். ரொம்ப பிகுபண்ணிக்கற. இஸ்ட்டம் இருந்தா போ இல்லைனா இரு.எனக்கென்ன வந்தது."

"என்னை போ... போன்றீங்களே ஏன் நீங்க கூடவந்தா உங்க கெளரவம் கொறைஞ்சுருமோ?"

'இவ என்ன இப்படிப்போனா அப்படி வர்றா, அப்படிப்போனா இப்படி வர்றா? பேசாமமேட்டரை வெளியில வச்சுக்கலாமா' என்று ஒருநிமிடம் யோசித்தான். 'ம்ஹீம்.. அதுசரியா வராது'.

"தங்கமணி சொன்னா புரிஞ்சுக்கோ. எனக்கு வெளியில வேலை இருக்கு. அதான் நீயும்அவனும் போய்ட்டு வாங்கனு சொல்றேன்."

"நான் தனியா போகலை."

"ஏன்?"

"உன் வீட்டுக்காரர் வரலையானு எல்லாரும் ஒரு மாதிரி கேப்பாங்க?"

"ஆபீஸ் வேலையா வெளிய போயிருக்காரு. முடிஞ்சா சாயங்காலம் வருவாருனுசொல்லு"

"அப்ப சாயங்காலம் வருவீங்களா?"

"வேலை சீக்கிறம் முடிஞ்சிட்டா வர்றேன். சுரேஸீக்கு இப்ப லீவுதான. ரெண்டு நாள் அங்கஇருந்துட்டு வா"

"நான் இல்லைனா ரொம்ப சிரமப்படுவீங்களே? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?"

"அதை நான் பார்த்துக்கறேன்"

"அப்ப இப்பவே கிளம்பட்டா?"

"ம் கிளம்பு"

தங்கமணி கிளம்புவதில் சுறுசுறுப்பானாள்.

ரங்கமணி மெதுவாக வெளியே வந்து மாதவனுக்கு போன் செய்தான் "மாதவா சாயங்காலம் ஆறுமணி"

"எங்க?"

"என் வீட்டுக்கு வந்திரு"

"வீட்லயா? உன் வொய்ஃப் இல்லையா?"

"இல்லை"

"பிரச்சனை எதுவும் வராதே?"

"வராது"

"அப்ப ஓ.கே"

தங்கமணியுடன் தெருமுனை வரை சென்று ஆட்டோபிடித்து அனுப்பி விட்டு வந்தான்.மணி 12 தான் ஆகியிருந்தது. 'சே... ஆறுமணி வரை என்ன செய்வது? 'டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றினான். எதுவும் பிடிக்காமல் டிவியை ஆஃப் செய்தான். அன்றைய நாளிதழை எடுத்து புரட்டினான்.

மீண்டும் தொலைபேசியில் மாதவனை அழைத்தான்.

"மாதவா புரோக்கிராம் கன்ஃபார்ம் தானே?"

"ஆமாடா சரியா 6 மணிக்கு வந்துருவேன்"

சொன்னது போல் சரியாக 6 மணிக்கு மாதவன் வந்தான்.

"என்னடா நீ மட்டும் வந்திருக்க. பார்ட்டி வரலையா?"

"வந்திரும்டா. வா உக்காரு அது வர்ரதுக்குள்ள நாம ரெண்டு ரவுண்டு ஏத்திப்போம்" என்றவாறு கையோடு கொண்டு வந்திருந்த ஐட்டங்களை எடுத்து டீப்பாயில் பரப்பினான்.

"போய் ரெண்டு கிளாஸ் எடுத்துட்டு வா"

ரங்கமணி ரெண்டு கிளாஸோடு வந்து அமர்ந்தான். மாதவன் ரெண்டு கிளாஸிலும் மதுவை ஊற்றி சோடாவை கலந்தான்.

"ஐஸ் இருந்தா நல்லாயிருக்கும். இருக்கா ரங்கமணி?"

ரங்கமணி எழுந்து போய் ஐஸ் கியூப் எடுத்து வந்தான்.
ரங்கமணிக்கு இருப்புக்கொள்ளவில்லை."மாதவா அட்ரஸ் கரெக்டா குடுத்தியா?கரெக்டா வந்திருமா?"

"அலையாதடா வந்திரும். ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க மாட்டேங்கறியே?இந்தா அடி" என்று ஒரு கிளாஸை எடுத்துக் கொடுத்தான்.

ரங்கமணி ஒரு மடக்குக் குடித்துவிட்டு வைத்தான்.மாதவன் ஒரே மடக்கில் குடித்துவிட்டு அடுத்த ரவுண்டு ஊற்றிக்கொண்டான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாதவன் ரெண்டு மூன்று ரவுண்டு முடித்துவிட்டு தான் ஃபிகர்களை மடக்கும் விதம் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.ரங்கமணிக்கு ஒரே படபடப்பாய் இருந்தது.

சரியாக 8 மணிக்கு காலிங் பெல் அடித்தது.

"மாதவா போய் கதவைத்திற"

"நீயே போய் திற" என்றவாறு மாதவன் நான்காவது ரவுண்டை வாயில் கவிழ்த்துக்கொண்டாண்.

வேகமாய் போய் கதவைத் திறந்த ரங்கமணி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

"என்னடா சிலையாட்டம் நின்னுட்ட?. அவ அழகுல அசந்துட்டியா? யேய்..... மல்லிகா உள்ள வா. இது நம்ம ஃபிரண்டுதான். இவனுக்காகத்தான் உன்னை வரச்சொன்னேன்".

"நீ ரங்கமணி தான?"

"ஆமா நீ..நீ.."

"செல்லமா மல்லீ....மல்லீனு கூப்பிடுவியே மல்லிகா. ஞாபகமிருக்கா?"

"இ...இருக்கு.."

"அடத்தூ.......நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? உன்னை காதலிச்ச பாவத்துக்கு உன்னை நம்பிவந்தவளை பாஸை தெரியாத இடத்துல அம்போனு விட்டுட்டு வந்திட்டியேடா பாவி" ரங்கமணியின் முகத்தில் காறிஉமிழ்ந்தாள் மல்லிகா.
"உவ்வே..........." மாதவன் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தான்.

நாற்றம்குடலைப்புடுங்கியது.

ரங்கமணியின் ஃபிளாஸ்பேக்கைப் போல.

Tuesday, December 18, 2007

வண்ணக் கோலங்கள்

இனி வரிசையாய் வண்ணக் கோலங்கள் வரும்.
இது சோதனைப் பதிவு.